இயற்கையோடு இயைந்த வாழ்வு: உலகத்திரைப்படங்கள் 2
Published by யாத்ரீகன் under அட்டகாச திரைப்படம், இயற்கை on செவ்வாய், ஆகஸ்ட் 26, 2008இயற்கையின் மீது பெரும் அன்பும், கவனமும் கொண்ட பெரியவர் ஒருவர், மரங்களை தானே நட்டு, பாதுகாத்து வளர்த்து வருகின்றார். தன் பராமரிப்பில் இருக்கும் மரங்களை தன் குழந்தைகளை போல பார்த்துவரும் இவருக்கு அரசாங்கத்திடமிருந்து ஒரு உத்தரவு வருகின்றது, இவர் கண்காணிப்பில் இருக்கும், இவர் உருவாகிய காடு ஒன்றை வெட்டப்போவதாக. அதை வெட்ட வருபவர்களை எவ்வளவு தடுத்தும் கேட்காததால், அம்மரங்களை கட்டியணைத்துக்கொள்கிறார், வெட்டுபவர்களும் இவர் விலகிவிடுவார் என நினைத்து கோடாலியை ஒங்க, இறுதியில் அம்மரங்களுக்காகவே உயிர்விட்டு அதன் உயிர்களை காக்கின்றார்.
இயற்கையின் மேல் இத்தனை காதலுடன் இருப்பவர்களை, இவர்களால் தான் நமக்கு வாழ்வளித்துவரும் பல இயற்கை செல்வங்கள் இன்னும் அழியாமல் இருக்கின்றன என அறியாமல், எளிதாக பைத்தியக்காரர்கள் என பலர் ஒதுக்கித்தள்ளிவிட்டு போகின்றோம், இவர்களின் செயலில் நூற்றில் ஒரு பங்கை கூட நம் அடுத்த தலைமுறைக்கு முன்மாதிரியாய் வைக்காமல் தவறிக்கொண்டிருக்கிறோம்.
இத்தகைய இயற்கையோடு ஒன்றிய வாழ்வு வேண்டுமென்று, விடுமுறைக்காலங்களில் ஊர்சுற்றும்போது நமக்கு தோன்றுவதோடு சரி. அவர்களுடைய வாழ்வுமுறையை இருப்பவர்களை மேலோட்டமாய் காணும்போது பெரும் பொறாமை ஏற்படுகின்றது, அதற்கு பின்னால் அதை காக்க அவர்கள் செய்யும் போராட்டமும் அதற்கான இழப்புகளும், வலிகளும் கற்பனைக்கெட்டாதவை .
அத்தகைய மனிதர்களுடைய துயரமும், அழகிய வாழ்வையும் அற்புதமாய் பதிந்திருக்கும் இரு படங்கள் தான் முறையே "Mountain Patrol: Kekelexi" மற்றும் "Story of the Weeping Camel". இவை இரண்டும் உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக்கொன்டவை என்பதில் சிறிதும் ஆச்சரியமில்லை.
இதில் "Mountain Patrol: Keklexi" எதிர்பாராமல் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு documentary படம் போல இருக்குமென்ற நினைப்போடு தொடங்கியவனுக்கு, அட்டகாசமான கேமரா கோணங்கள், மனதை மயக்கும் திபெத்தின் மலைமுகடுகள், காடுகள், அற்புதமான-வேகமான திரைக்கதை, அங்காங்கே அதிர்ச்சியூட்டும் உண்மைச்சம்பவங்கள், முற்றிலும் எதிர்பாராத நிகழ்வுகள் என மனதை கவர்ந்த விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதன் முடிவு cinematic-ஆக இருந்துவிடுமோ என்று வருத்தப்படுக்கொண்டிருந்த வேளையில் .. அதை ஏன் சொல்ல வேண்டும், பாருங்களேன்.
ஒரு சாவிற்கான அதிர்ச்சியூட்டும் திபெத்திய மதச்சடங்குகளுடன் தொடகுகின்றது படம், கொஞ்சம் கொஞ்சமாய் அந்த குழுவினருள் ஒருவனாய் நாமும் அவர்களுடன் பயணிக்கத்தொடங்குகின்றோம், ஓடுகின்றோம், மூச்சுவாங்க உயிர்பிழைக்கின்றோம்.
இதில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் படத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்றுதான் சொல்லவேண்டும். Patrol செய்ய புறப்படும்போது அந்த குழுவினருடைய உணர்ச்சிகள், நூற்றுக்கணக்கான மான்கள் கொல்லப்பட்டு கிடக்கும் அந்த தருணம், அதைக்காணும் அவர்களின் உணர்வு, கைதிகளை மேற்கொண்டு செல்ல முடியாமலும் கொல்ல முடியாமலும் அவர்களை விட்டுச்செல்வதும், உணவின்றி, எரிபொருளின்றி குழுவில் சிலரை நடுவே வேறு வழியின்றி பனிபொழியாது என்ற நம்பிக்கையுடன் விட்டுச்செல்லும்போதும், சரியான அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களுக்கு கூட பணமின்றி, அவர்கள் மனசாட்சிக்கு விரோதமாய் செயல்படுவதைத்தவிர வேறு வழியின்றி சூழ்நிலை அமைவதும்.
கட்டாயம் பாருங்கள் !!!!
ஒரு அதிரடி ஆக்க்ஷன் படம் பார்த்து படம் வேண்டும் என்பவர்கள் மேலுள்ள படம் பார்க்கையில், இப்போதைக்கு ஒரு அழகிய கவிதைபோல, வித்தியாசமான, சுவாரசியமான படம் ஒன்று பார்க்கும் மனநிலைக்கொரு படம் வேண்டுமென்றால் நீங்கள் பார்க்க வேண்டியது, "Story of the Weeping Camel".
இதெல்லாம் அறிவியல்பூர்வமான உண்மையா ?, இப்படியெல்லாம் நடக்குமா என்றெல்லாம் ஆராய்ந்து யோசிப்பதை விட்டு பார்க்கத்துவங்கினால் நிச்சயமாய் இரசிப்பீர்கள். நடக்கும் நிகழ்வுகளை மிக கவிதைத்துவமாய் விஷுவலாய் காமிப்பதும், அதை போர் அடிக்காமல் கொண்டுசெல்வதும்.. மிகவும் சந்தோசத்தை வரவழைக்கும் படம் இது.
நம் ஊர்பக்கம்,அனுபவம் மூலமும், instinct மூலமும் பெரியவர்கள் செய்யும் சில விஷயங்களை பார்த்திருப்போம், இதுபோலதொரு நிகழ்வுஐ நாம் பார்த்திராத ஒரு பிரதேசத்திளுள் காமிக்கும்போதுதான், இதுபோன்ற பிரதேசங்களுக்கு பயணம் செய்யும் விருப்பம் மிகவும் அதிகரிக்கின்றது.
இறுதியில் அந்த முடிவை காண்பவர்கள் இசைப்பிரியர்களாய் இருந்தால் இன்னும் இரசிப்பார்கள் :-)
11 மறுமொழிகள்:
பெயருக்கு ஏற்றார் போல் அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்
பரிந்துரைகளுக்கு நன்றி! :)
நல்லப் படங்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி
நன்றி ஜாக்கி :-) .. அந்த படங்களை பாருங்களேன்.. அதில் வரும் இடங்கள் அவ்வளவு அற்புதமாய் இருக்கின்றது.. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் HEAVEN மண்ணில் இருந்தால் அதில் இதில் வரும் லோகேஷன்சும் கட்டாயம் இருக்கும் .. முக்கியமாய் Kekelexi படத்தில் வரும் இடங்கள்
நன்றி கப்பி .. இதை பார்த்துட்டு விமர்சனத்தை கீற்றுக்கொட்டாய்ல எழுதுங்க
கட்டாயம் பார்க்க முயற்சி பண்ணுங்க சூர்யா .. :-)
அரிய திரைப்படங்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!!
கட்டாயம் பார்க்கிறேன்
யாத்ரீகன்...
மிகவும் ரசித்துப் பார்த்திருப்பீர்கள் போலிருக்கிறது. படத்தின் mood பற்றியும் சொல்லியிருப்பதற்கு நன்றி. பார்க்க முயற்சிக்கிறேன்.
அன்பு நித்யன்
படங்களை பற்றிய தகவல்களை நீங்கள் எழுதியிருக்கும் விதம்......படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது:))
நல்லப் படங்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி,
கட்டாயம் பார்க்கிறேன்.
பார்க்கவே ரணகலமா இருக்கே
பார்வைக்கு நல்ல விருந்து
வாழ்த்துகள்
கவிஞர்வாலிதாசன்
முகவை-1
கருத்துரையிடுக