யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

Whatzup Bro

Published by யாத்ரீகன் under on திங்கள், ஆகஸ்ட் 04, 2008
ஞாயிறு காலை, சுடச்சுட, மிளகு காரம் தொண்டைஎங்கும் இறங்க, பொங்கல் சாப்பிட்டுவிட்டு வெளியே வர, அற்புதமான மேகமூட்டத்துடனான வெயில் வெளியே.. refreshing-ah என்ன பண்ணலாமென யோசிக்கையில் ரிதம் படம் கையில் தட்டுப்பட்டது.. Netflix-இல் OldBoy மூலம் போனவாரம் போட்டுக்கொண்ட சூடு நியாபகம் வர.. வேறு யோசனையின்றி போட்டுவிட்டேன்..

வஸந்தின் படங்கள் எல்லாம் ஒரு மாதிரி feel good படங்கள், மெல்லிய நீரோடை மாதிரி, ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிவிடும்.. ஆனால் என்ன பேசி பேசி கதாபத்திரங்களுக்கு மூச்சு வாங்குகிறதோ இல்லையோ பார்க்கும் நமக்கு களைப்பாகிவிடுகின்றது.. அப்போ அப்போ அலுக்கும் streotype காட்சிகளும் இதோடு சேர்ந்து கொள்ள.. (அத்தனையும் தெரிந்தும் தியேட்டரில் பார்ப்பதற்கு நான் முயற்சி எடுத்து சூடுபட்டுக்கொண்ட படம் சத்தம் போடாதே மட்டும் தான்)...

ரஹ்மானின் இசை, அழகான ஜோ, அமைதியான அர்ஜுன், Nostalgic தனியே தன்னந்தனியே பாடலும் மயக்கும் ஷங்கர் மஹாதேவனின் குரலும்.. நிஜமாவே refreshing தான்.. ஒரு கட்டத்தில் இன்னும் எவ்வளவு நேரம் படம் இருக்குன்னு பார்க்கையில் இன்னும் ஒரு மணிநேரமா என அலுத்துத்தான் போனது.. ஆனால் மோசமில்லை its so refreshing.. ஒரே யோசனையில் சொல்வேன் இசைதான் காரணம் :-)

8 மறுமொழிகள்:

R A J A சொன்னது… @ திங்கள், ஆகஸ்ட் 04, 2008 6:37:00 முற்பகல்

//சுடச்சுட, மிளகு காரம் தொண்டைஎங்கும் இறங்க, பொங்கல் சாப்பிட்டுவிட்டு வெளியே வர//
கொடுத்து வச்ச ஆளு தான் நீங்க, USல எங்க காரமா சாப்பாடு கிடைக்கிது? நானும் எத்தனையோ Indian restaurant போய் பார்த்துட்டேன், நல்ல காரமான சாப்பாடு குறிப்பாக காரமான ரசமும், சூப்பும் எங்கேயும் கிடைக்கவில்லை.

R A J A சொன்னது… @ திங்கள், ஆகஸ்ட் 04, 2008 6:37:00 முற்பகல்

//சுடச்சுட, மிளகு காரம் தொண்டைஎங்கும் இறங்க, பொங்கல் சாப்பிட்டுவிட்டு வெளியே வர//
கொடுத்து வச்ச ஆளு தான் நீங்க, USல எங்க காரமா சாப்பாடு கிடைக்கிது? நானும் எத்தனையோ Indian restaurant போய் பார்த்துட்டேன், நல்ல காரமான சாப்பாடு குறிப்பாக காரமான ரசமும், சூப்பும் எங்கேயும் கிடைக்கவில்லை.

babu சொன்னது… @ செவ்வாய், ஆகஸ்ட் 05, 2008 9:43:00 முற்பகல்

வஸந்தின் படங்கள் எல்லாம் ஒரு மாதிரி feel good படங்கள், மெல்லிய நீரோடை மாதிரி, ரொம்ப ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிவிடும்"
வசந்த் இன் படங்கள் பற்றிய என் எண்ணமும் அதேதான்

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், ஆகஸ்ட் 05, 2008 11:44:00 முற்பகல்

அட நீங்க வேற.. எங்கயும் கிடைகலயேனுதான் நாங்களே சமைச்சிட்டோம் :-D ..

இங்க இருக்கும் இந்திய உணவகங்கல்ல (until & unless behind the scenes மக்களை நன்றாய் தெரிந்து வைத்திருத்தல் நலம், அதிலும் அவர்கள் தமிழர்களை இருத்தல் மிகவும் நலம் ;-) ) காரம் அப்படீனா மிளகாய்ப்பொடி அதிகம்னு அர்த்தம் போல.. பலதடவை பதம் பார்த்திருக்கு :-(

யாத்ரீகன் சொன்னது… @ செவ்வாய், ஆகஸ்ட் 05, 2008 11:44:00 முற்பகல்

வருகைக்கு நன்றி ராஜா & பாபு ..

venkat சொன்னது… @ செவ்வாய், ஆகஸ்ட் 05, 2008 5:20:00 பிற்பகல்

enga namba oor aitam la saptinga!!(i knw this is irrevelant to thuis blog but thonuch...)

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, ஆகஸ்ட் 08, 2008 1:48:00 முற்பகல்

@venkat:
எல்லாம் அடியேனின் கைவண்ணம்தான் :-)

VENKATESHWARAN k சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 09, 2008 6:35:00 பிற்பகல்

நீங்கள் சொல்வதைபோல இசை தான் ஒரு பாடலை ரசிக்க வைக்கிறது . வரிகளும் இரண்டாம் பட்சம் தான் . ஆனால் வரிகளின் முக்கியத்துவம் ,அந்த அந்த சூழ்நிலைக்கு நாம் போனால் தான் அதன் முழுமையான அர்த்தத்தை நம்மால் உணர முடியும்.

கருத்துரையிடுக