யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

சிறந்த இந்திய திரைப்பட முத்தம் எது ?

Published by யாத்ரீகன் under on சனி, ஆகஸ்ட் 30, 2008
#1 கமலின் முத்தங்களை தவிர நம்ம தமிழ் திரைபடங்கள்ள வந்த முத்தங்கள்ள, சும்மா விருப்பமிலாம கண்ணை வெறுப்போட மூடுற பெண்ணை வண்புணருவதை போலில்லாமல், கவிதைத்துவமா முத்தமிடும் காட்சிகள் எதுவும் இருக்கா ?

#2 சரி கமலின் முத்தங்களிலேயே அப்படி கவிதைத்துவமா வந்த காட்சி எது ?

#3 வேறு இந்திய மொழிப்படங்கள்ள வந்த கவிதைத்துவமான முத்தங்கள் எதாவது ?

உங்களுக்கு தெரிஞ்சத அநானியாவாவது வந்து சொல்லிட்டு போங்களேன் :-D

பி.கு:
ஏடாகூடமா யோசிக்காதீங்க, Notebook படத்தில வருவது Best Kiss of a year-நு படிச்சேன் இன்னும் பார்க்கல, சரி நம்ம படங்கள்ல எதுனு கொஞ்சம் தேடி பார்த்தப்போ, கிட்டதிட்ட எல்லாமே பல்லு விளக்காத ஹீரோ தன்னை வன்புணருவதை போலத்தான் reaction குடுக்குறாங்க, மேலும் அதன் காட்சியமைப்பும் அத்தனை கவிதைத்துவமா இருக்குறதில்ல.. இப்படி ஏடாகூடமா நான் யோசிச்சதோட விளைவு தான்.. உங்களுக்கு தெரிஞ்சத அநானியாவாவது வந்து சொல்லிட்டு போங்களேன் :-D

8 மறுமொழிகள்:

ஆயில்யன் சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 30, 2008 12:27:00 பிற்பகல்

ரைட்டு! :)

//உங்களுக்கு தெரிஞ்சத அநானியாவாவது வந்து சொல்லிட்டு போங்களேன் :-D //

இல்ல நான் என் பேர்லயே சொல்றேன்!

இன்னிக்கும் நாளைக்கும் சனி ஞாயிறு ரெண்டு நாளும் உங்களுக்கு லீவு ஸோ நெட் பிக்ஸ் மூலமா நிறைய படங்கள் பார்க்கப்போறீங்க!!!!

:))))))))))))))))

R A J A சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 30, 2008 12:39:00 பிற்பகல்

#1 பம்பாய் படத்தில், அரபிக் கடலோரம் பாடலின் இடையில், அரவிந்த்சாமி மனிஷாவுக்கு ஒரு முத்தம் கொடுப்பார். மியூசிக்,Picturisation, lighting என எல்லாம் சேர்ந்து ரொம்ப அர்ப்புதமா இருக்கும்.

#2 'சத்யா' படத்தில் 'வளையோசை சல சல' பாடலில், காற்று பலமாக அடிக்க, அமலாவின் சேலை அவர் முகத்தை முழுவதுமாக மூடியிருக்கும், அப்போது கமல் உதட்தோடு உதடு (கமல் அப்புடினாலே உதட்தோடு உதடு தானேன்னு சொல்லுறது கேக்குது) டக்் என முத்தம் கொடுப்பார். இசை இரு நொடி நின்றுவிட்டு மீண்டும் தொடரும். இது ஒரு கவித்துவமான முத்தம்.

பொதுவாக கமல் கொடுக்கும் அனைத்து முத்தமும் பார்க்க கவித்துவமாக இருக்கும். அது மகாநதியில் அழுதுகொண்டே கொடுக்கும் முத்தமாகட்டும், ஹேராமில் கட்டிலில் கொடுக்கும் முத்தமாகட்டும்.

தம்பி சொன்னது… @ சனி, ஆகஸ்ட் 30, 2008 4:44:00 பிற்பகல்

//கிட்டதிட்ட எல்லாமே பல்லு விளக்காத ஹீரோ தன்னை வன்புணருவதை போலத்தான் reaction குடுக்குறாங்க,//

:))

நாயகி நாயகனுக்கு கொடுக்கற உதட்டு முத்தம்தான் கிக்குன்னு நான் நினைக்கிறேன்.

ராமன் அப்துல்லா படம் பாத்திங்களா... அதுல ஒரு பாட்டு முழுக்க உதட்டு முத்தம் அதிகமா இருக்கும். இயல்பாவும் இருக்கும்.

பெயரில்லா சொன்னது… @ ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2008 7:17:00 பிற்பகல்

கவித்துவமாக எப்படி இருக்கும் when they are faking it (பிறன் மனையாளை முத்தமிட்டால்)?

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, செப்டம்பர் 05, 2008 9:03:00 முற்பகல்

கமல் முகத்துல ஒரு ஜொள்ளு காட்டாம, இளிக்காம,ஒரு முகபாவத்துல break இல்லாம ஒரு குருகுருப்போட முத்தம் குடுப்பார்..எல்லா படமுமே ஓகே..சத்யா

விக்ரம் அப்பப்போ சுமார்.சில பொண்ணுங்க கூட கொடுமை..காதல் சடுகுடு

விஜய் ரஜினி..இவங்க எல்லாம் அநியாயதுக்கு artificial பொண்ணுங்க கூட முத்தம் குடுப்பாங்க!!அதெல்லாம் பாக்குறதுக்கு மூடிட்டு தூங்கலாம்

ஹிந்தியில இம்ரான் ஹஸ்மிக்கு இணையா யாரும் முத்தம் குடுத்திருக்க முடியாது..மர்டர் etc.

SurveySan சொன்னது… @ புதன், செப்டம்பர் 10, 2008 12:40:00 பிற்பகல்

அடக்கொடுமையே. உங்கள நான் நல்லவருன்னு இல்ல நெனச்சேன்?

சரி கேட்டுட்டீங்க, வந்துட்டேன், சொல்லிடறேன் ;)

கேள்வி படிச்சதும், சட்டுனு ஞாபகம் வரது, விடலைப் பருவத்தில் பார்த்த மணிரத்தினத்தின் இதயத்தை திருடாதே, ஓம். நமஹ பாட்டு முத்தம்.

புருனோ Bruno சொன்னது… @ சனி, நவம்பர் 08, 2008 6:13:00 பிற்பகல்

நான் நினைத்தவை எல்லாம் ஏற்கனவே இங்கு சொல்லப்பட்டுவிட்டதால்

#1 பம்பாய் படத்தில்,
#2 'சத்யா' படத்தில் '
அது மகாநதியில் அழுதுகொண்டே கொடுக்கும் முத்தமாகட்டும், ஹேராமில் கட்டிலில் கொடுக்கும் முத்தமாகட்டும்.

மறுமொழிகிறேன்

அதிரை ஜமால் சொன்னது… @ திங்கள், நவம்பர் 17, 2008 10:39:00 முற்பகல்

கமலை தவிர்த்து
இந்திரா படத்தில் உள்ள முத்தம் - அருமை.

கருத்துரையிடுக