யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

காதல் ரோஜாக்களிலிடையே நசுங்கிப்போன ஒரு கொடுமை

Published by யாத்ரீகன் under on புதன், பிப்ரவரி 15, 2006

காதல், உயிர், இதயம், ரோஜா, ஜென்மம், பந்தம் எனும் வார்த்தை ஜாலங்களிடையேயும்....

" இருபதாம் நூற்றாண்டுங்க இது , சாதியாவது மண்ணாவது, அதெல்லாம் இப்போ யாருங்க பாக்குறா, சும்மா அரசியல் பண்றதுக்கும் பொழப்பு நடத்துறதுக்கும்தான் இன்னும் சில பேர் அதைப்பிடிச்சு தொங்கிக்கிட்டு இருக்காங்க... இன்னைக்கு பாருங்க உயர்ந்த சாதினு சொல்றாங்கள்ல அவுங்கள்ல எத்தனை பேரு தகுதியான திறமையிருந்தும் ஒண்ணுமே இல்லாம இருக்காங்க, தாழ்ந்த சாதினு சொல்றாங்கலே அவுங்களப்பாருங்க சலுகைமேல சலுகை வாங்கிகிட்டு எவ்வளவோ உயர்ந்த நிலையில இருக்காங்க.. காலம் மாறிப்போச்சுங்க, இன்னும் அதே பழைய உழுத்துப்போன சட்டங்களையும், சலுகைகளையும் வைச்சிருக்க கூடாது, அப்படி இருந்தா அடுத்து அடக்கப்பட்டு வைச்சிருக்குற அவுங்க போராடுவோம்னு கொரலு விட ஆரம்பிச்சிட்டாங்க...."


அங்கங்கே இந்த தலைப்பில் சண்டைகளிடையேயும், வாக்குவாதங்களிடையேயும்...

சப்தமின்றி அமுங்கிப்போனது ஒரு செய்தி....


செய்தி: இராஜஸ்தானில் ஒரு மாவட்டத்தில், உயர்சாதியினர் எனப்படுபவர்களின் பெண்ணை கீழ்சாதியினர் எனப்படுபவர்களில் ஒரு ஆண் காதலித்ததற்காக, அந்த ஆணின் தங்கையை பட்டப்பகலில், ஊரின் நடுவே நிர்வாணப்படுத்தியுள்ளனர் உயர்(?)சாதி எனப்படுவோர், இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த/இருந்த உயர்சாதி எனப்படும் அவர்களில் பெண்கள், இந்த கொடுமையை தடுக்காமல், இந்த பரிதாபத்திற்கு உரிய பெண்ணை வண்புணர்ந்துவிடுங்கள் என்று கோஷமிட்டதுதானாம்.


யாருங்க காரணம் ?

பணம்,பதவி,சமூகம் என அனைத்திலும் பலம் பெற்றுவிளங்கும் உயர்சாதி எனப்படுவோரா ? இல்லை ஒடுக்கப்பட்டவர்கள் என்ற அடையாளம் கொண்டு சலுகைகள் பெற்று பணம்,பதவி,சமூகம் என்பனவற்றில் பலம் பெற்று, தன் மக்களை, தன் இனத்தை உயர்த்த வழிமுறைகாணாத மக்களா ?


இது புரிஞ்சா ஏங்க இந்த கொடுமையெல்லாம் நடக்குதுனு யாரோ இங்க சொல்றாங்க.. ஹீம் :-( வெறுமன வருத்தப்படுறதவிட, நம்ம குழந்தைகள், நம்ம கட்டுப்பாடின் கீழ் வளர்கின்ற குழந்தைகள் கிட்ட இந்த வேற்றுமைகளை புகுத்தாம வளர்க்கலாமே... உணவகத்தில் வேலை செய்ற சிறுவனை குழந்தைகள் முன் விரட்டாம நன்றாக நடத்துவது போன்ற செயல்கள் மூலம் நாம செயல்காட்டியாவும் இருக்கலாமுல்ல ?


நேத்து இந்த செய்தி NDTV செய்தி சானல்ல கேட்டதிலருந்து ரொம்ப கஷ்டமா இருந்தது, முன்பின் தெரியாத அந்த மனிதர்கள் மீதும், இவர்களை இப்படி பிரித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மீதும் பயங்கர கோபம்,ஆத்திரம்.... அதற்கு வடிகாலே இந்த பதிவு, மத்தபடி யாரையும் தாக்குறதுக்கோ, தமிழ்மணத்துல புகழடைஞ்ச உள்குத்து,வெளிக்குத்துக்காகவோ கிடையாது... ரொம்ப சென்சிடிவ்வான விஷயம் இதுனு தெரியும், இருந்தாலும் மனசை குடைஞ்சுகிடு இருந்தது

17 மறுமொழிகள்:

ranjit kalidasan சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 17, 2006 10:48:00 AM

இது போன்ற கொடுமைகள் நம் இந்திய கிராமங்களில், அதிகமாக வட இந்தியாவில் நடக்கிறது என்பது உன்மை. நான் நிறைய படித்திருக்கிறேன். இதற்கு ஒரு ஆக்கப்பூர்வமான தீர்வு கானாமல் இந்தியா மிளிர்கிறது என்று நாம் பெருமை கொள்வது வீன்

யாத்ரீகன் சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 17, 2006 1:25:00 PM

ஆம் இரஞ்சித்... வட இந்திய கிராமங்கள், தெனிந்திய கிராமங்களை விட மிகவும் பிற்போக்கானவை, முன்னேற்றமடயாதவை... பெரியார் போன்றோரின் தோற்றம் தமிழகத்தில் பெரும் Advantage ... இங்கே தீர்வு காணப்போவபர்கள் யார் என்பதே என் மிகப்பெரும் வருத்தம்.... இத்தகைய சூழ்நிலைகளில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு வந்தவர்களா.. இல்லை இதற்கு காரணமானவர்களைச்சேர்ந்தவர்களா.. யார் பொறுப்பேற்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடப்போகின்றார்கள்..

Maayaa சொன்னது… @ ஞாயிறு, பிப்ரவரி 19, 2006 4:48:00 AM

sendhil
romba azhagaa solli irukeenga!! i agree totally !!

romba sensibleaana pechu !!!

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 20, 2006 12:08:00 PM

நன்றி ப்ரியா..

Ram.K சொன்னது… @ வியாழன், பிப்ரவரி 23, 2006 6:44:00 AM

இது போன்ற செய்திகளை வெளிப்படையாகப் பேச வலைப்பூக்களும் என் டி டீவி போல வரவேண்டும். உங்கள் பதிவு அருமை.

வாழ்த்துக்கள்.

Maayaa சொன்னது… @ புதன், மார்ச் 01, 2006 9:58:00 AM

enna romba naala poste kaanum?

யாத்ரீகன் சொன்னது… @ புதன், மார்ச் 01, 2006 6:56:00 PM

@ப்ரியா:
ரொம்ப நாள் கழித்து பயங்கர சந்தோஷத்துடனும், முழு உற்சாகத்துடனும் உள்ளேன் :-) அதனால்தான் அடுத்த பதிவில் தாமதம்

யாத்ரீகன் சொன்னது… @ புதன், மார்ச் 01, 2006 7:04:00 PM

@வேதா:
>>> more prevelant in north indian villages
>>> pala sirthiruthavaathigalum veendum

சரிதான் வேதா, ஆனால் யோசித்துப் பார்த்தபோது... வட இந்திய நகரங்கள் எவ்வளவு நாட்களுக்கு முன்னே முன்னேறியன, அங்கேதான் பல பொருளாதார ரீதியில் பெரிய தலைகள் உண்டு, பலர் பல நாடுகளில் பரவியுள்ளனர்... ஆனால் இப்படி முன்னேறியவர்கள் தாங்கள் இருந்த ஊரையோ, சமூகத்தையோ முன்னேற்ற முயற்சி எடுக்காதவரை, அவர்கள் சீர்திருத்தவார்த்திகளாக வேண்டாம், குறைந்தபட்சம் ஒருவரையாவது முன்னேற்ற முயற்சித்தால் போதுமே..

Chandravathanaa சொன்னது… @ செவ்வாய், ஏப்ரல் 04, 2006 1:31:00 PM

செய்தி: இராஜஸ்தானில் ஒரு மாவட்டத்தில், உயர்சாதியினர் எனப்படுபவர்களின் பெண்ணை கீழ்சாதியினர் எனப்படுபவர்களில் ஒரு ஆண் காதலித்ததற்காக, அந்த ஆணின் தங்கையை பட்டப்பகலில், ஊரின் நடுவே நிர்வாணப்படுத்தியுள்ளனர் உயர்(?)சாதி எனப்படுவோர், இதில் குறிப்பிடத்தக்க விஷயம், அந்த நேரத்தில் அங்கு வந்திருந்த/இருந்த உயர்சாதி எனப்படும் அவர்களில் பெண்கள், இந்த கொடுமையை தடுக்காமல், இந்த பரிதாபத்திற்கு உரிய பெண்ணை வண்புணர்ந்துவிடுங்கள் என்று கோஷமிட்டதுதானாம்.

சத்தமில்லாமல் இப்படி இன்னும் எத்தனை கொடுமைகள்!
இவைகளை வெளிக்குக் கொண்டு வருவபர்கள் சில சமயங்களில் குற்றவாளிப் பட்டத்தை வாங்கிக் கொள்கிறார்கள்.
சமூகநலன் கருதிச் சிந்திப்பவர்களும் செயற்படுவர்களும் மிகக் குறைவாக இருப்பதுவும் இப்படியானவைகளின் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தடையாவதற்குக் காரணமாகின்றன.

பரஞ்சோதி சொன்னது… @ செவ்வாய், ஏப்ரல் 04, 2006 1:51:00 PM

மிகவும் கொடுமையான செய்தி, இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது, அரசாங்கமும் காவல்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாதி என்ற கொடுமை இந்தியாவை விட்டு போகும் வரை இந்தியா மனிதனை மனிதன் உண்ணும் காட்டுமிராண்டி தேசமாக உலகவரைபடத்தில் இருக்கும்.

அடுத்த தலைமுறையாவது நாம் சரியான பாதையில், சாதி, மத, இன வெறியற்ற பாதையில் கொண்டு செல்வோம், அதை நம் வீட்டிலேயே ஆரம்பிப்போம் என்று உறுதியை எடுப்போம்.

பொன்ஸ்~~Poorna சொன்னது… @ செவ்வாய், ஏப்ரல் 04, 2006 2:20:00 PM

ரொம்பவும் அநியாயமான நிகழ்வு.. நாம் இந்தியாவில் தான் இருக்கிறோமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கும் நிகழ்ச்சி. பதிவிட்டு என்னைப் போல் NDTV எல்லாம் பார்க்காத (எங்கங்க, வீட்டுக்கு நேரத்தோட போனாத் தானே... ) நிறைய பேர் கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு நன்றி...

பெயரில்லா சொன்னது… @ சனி, ஏப்ரல் 08, 2006 9:35:00 AM

ippadi patta kodumaigal innum nadandhukitu irukaradhu theriyama irundhen... its an awakening after reading this page... oru pennai ippadi kodumai paduthum podhu matha pengal paathukitu summa ninnanga'nu kekum podhu romba varuthamavum vetkamavum iruku... how can that happen?? i'm all shocked... 'untouchability is a sin.' 'untouchability is a crime.' 'untouchability is inhuman.' Are these quotes reserved for printing in textbooks??!! 'saathigal irandozhiya verillai'- manapaada pagudhiku mattum thana?? Its very true yathri... It lies in the hands of the young parents... kuzhandhainga manasula indha paagupaadi puguthama valakanum... nichayam oru naal indha kodumaigaluku mutruppulli vaikalam... manidha naeyathai unarndhu vittaal podhum manangalai punpadutha maatom... aanal adhanai puriya manidhargaluku unarthuvadhu eppadi??!

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஏப்ரல் 26, 2006 10:41:00 PM

@சந்திரவதனா:
>> சமூகநலன் கருதிச் சிந்திப்பவர்களும் செயற்படுவர்களும் மிகக் குறைவாக இருப்பதுவும்

ஊடகங்களின் பணியல்லவா இது, சமூகநலனையும், நல்லெண்ணத்தையும் சரியான முறையில் பாமர மக்களிடம் கொண்டுசேர்ப்பது.. அதைவிடுத்து இவற்றை விட்டுவிடுவது தானே நடக்கின்றது..

வருகைக்கு நன்றி.

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஏப்ரல் 26, 2006 10:43:00 PM

@பரஞ்சோதி:
>>> அரசாங்கமும் காவல்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவையுடன் இவர்களுக்கு விழிப்புணர்வும், கல்வியறிவோடு உலகறிவும் புகட்டப்பட்டால் மேய்ப்பான் தேவைப்படும் மந்தையாயில்லாம்ல் இருப்பார்கள் அல்லவா..

>> நம் வீட்டிலேயே ஆரம்பிப்போம் என்று உறுதியை எடுப்போம்

இதுதான் எளிதான பரவலான வழிமுறை..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஏப்ரல் 26, 2006 10:44:00 PM

@பொன்ஸ்:
வருகைக்கு நன்றி பொன்ஸ்.. என்ன பண்ண நம்ம வீட்டு பெண்மணிகள் கொஞ்சம் நம்மோடு சேர்ந்து இந்த மாதிரி டீவி நிகழ்ச்சிகள் பார்த்தால் நல்லாத்தான் இருக்கும்..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஏப்ரல் 26, 2006 11:46:00 PM

@நிலா:
>> theriyama irundhen

தவறொன்றும் இல்லை நிலா, நாம் வளர்க்கப்படும் முறை அப்படி, பெற்றோர்களுக்கு நாம் நன்கு படிக்க வேண்டும் வேறு எந்த பிரச்சனையிலும் சிக்கிக்கொள்ளாமல், பள்ளியில் பாடங்களோ இன்னும் அசோகர் மரம் நட்டார் என்று, இதற்கிடையில் ஊடகங்களும் திரைத்துறையையே நம்பி.. ஆக நாமலாக நம் பார்வையை விசாலப்படுத்தாவிடில் நம் உலகம் சுருங்கியே இருக்கும்..

>> its an awakening after reading this page

மிக்க நன்றி, இந்த பதிவு தன் நோக்கத்தை சென்றதாக நிறைவு கொண்டேன்..

>> manapaada pagudhiku mattum thana

பொறுப்பு ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமுமே உள்ளது.. இத்தகைய விஷயங்களை குழந்தைகளிடம் தெளிவாக விவாதிப்பது அவர்கள் வாழ நல்ல சமூகத்தை விட்டுச்செல்லவே என்று உணரவேண்டும்..

>> unarthuvadhu eppadi??!

படிப்பறிவும், பரந்துபட்ட உலகறிவும் மட்டுமே இதனை சாதிக்கும் என்பது என் நம்பிக்கை..

யாத்ரீகன் சொன்னது… @ ஞாயிறு, ஜூன் 11, 2006 1:27:00 AM

@சிவா:
முதல் முறை வருகை தந்திருக்கீங்க.. நன்றி..

ஆம் சிவா, நகரங்களில் எவ்வளவோ முன்னேறிவிட்ட மக்கள் இவர்களுக்கு கைகொடுக்கவும் இல்லை.. மேலும் முன்னேற்றம் என்பது பரவலாக இல்லாமல், நகரங்களில் மட்டுமே அமைந்ததின் விளைவு..

கருத்துரையிடுக